கடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தொகுதியில் திமுக வேட்பாளராக வி.பி. துரைசாமியம்,  அதிமுக வேட்பாளராக சரோஜா போட்டியிட்டனர். அதில் அதிமுக வேட்பாளர் சரோஜா வெற்றி பெற்ற சமூக நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். 

இத்தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட வி.பி. துரைசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் சரோஜா வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவில் ராசிபுரம் தொகுதியில் 18 ஆயிரம் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக, அதிமுக வேட்பாளருக்கு சாதகமாக தேர்தல் அதிகாரி செயல்பட்டதாகவும் கூறி  கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை பல நாட்களாக நடைபெற்று வந்தது. 

இந்நிலையில் இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. ராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் அமைச்சர் சரோஜா வெற்றி பெற்றது செல்லும். தேர்தலில் தோல்வி அடைந்த திமுக வேட்பாளர் துரைசாமி மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.