நடிகர் ரஜினிகாந்தை நாயுடன் ஒப்பிட்டு நாஞ்சில் சம்பத் விமர்சனம் செய்திருப்பதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.

துக்ளக் விழாவில் பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று ரஜினிகாந்த் கூறியிருந்தார். அப்போது இந்து குழுமத்தின் அவுட்லுக் பத்திரிகை என்று கூறி புதிய சர்ச்சையில் சிக்கினார். ஒரு வாரமாக தமிழகம் முழுவதும் பேசப்படும் பிரச்னை பற்றி விளக்கம் அளிக்க வந்தவர் கொஞ்சம் ஆய்வு செய்து வந்திருக்க வேண்டாமா, தனித் தனிப் பத்திரிகைகளான இந்து மற்றும் அவுட் லுக்கைப் பற்றி கூட தெரியாமல் பேசுகிறார்களே என்று பலரும் சிரித்தனர்.

இந்த நிலையில் நாஞ்சில் சம்பத் ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “அவுட்லுக்குன்னு சொல்றாரு..ஹிந்து குழுமம்னு சொல்றாரு..அது செரி நக்குற நாய்க்கு செக்கு எது சிவலிங்கம் எதுன்னு தெரியவா போகுது! #பெரியார்
@rajinikanth” என்று குறிப்பிட்டுள்ளார்.

நாயுடன் ஒப்பிட்டுப் பேசியதற்கு ரஜினி ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பெரியார் மற்றும் நாஞ்சில் சம்பத்தை மிகக் கடுமையாக விமர்சித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.