ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக திமுக போராட்டம் அறிவிப்பு அறிவித்துள்ளது.

ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக, வருகிற 28ஆம் தேதி காவிரி டெல்டா மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தல் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு, மீனவ மற்றும் தோழமை அமைப்புகள் சார்பில் வரும் 27ம் தேதி முதல் காவிரிப்படுகையில் பல்வேறு போராட்டங்கள் நடைபெறும் என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.