திராவிட அரசியலுக்கு எதிராக பேசி வரும் நடிகர் ரஜினிகாந்தை திமுக மிக வித்தியாசமாக டீல் செய்து வருகிறது.

சென்னை: திராவிட அரசியலுக்கு எதிராக பேசி வரும் நடிகர் ரஜினிகாந்தை திமுக மிக வித்தியாசமாக டீல் செய்து வருகிறது. ரஜினிக்கு எதிராக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை திமுக முன்னிறுத்தி வருகிறது.

பெரியார் குறித்தும், முரசொலி குறித்தும் நடிகர் ரஜினிகாந்த் பேசிய கருத்துக்கள் அவரின் வலதுசாரி அரசியல் நிலைப்பாட்டை எடுத்துக்காட்டி உள்ளது. ரஜினியின் இந்த பேச்சு திமுகவையும், திக தொண்டர்களையும், அதிமுகவையும் கூட கடுமையாக சீண்டி உள்ளது.

நடிகர் ரஜினி காந்த் பெரியார் குறித்த கருத்துக்கு நான் மன்னிப்பு கேட்க முடியாது.பெரியார் குறித்து நான் பேசியது தவறானது கிடையாது, என்று கூறியுள்ளார். ரஜினி இப்படி மன்னிப்பு கேட்க மறுத்ததும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..
ரஜினியை பாஜக தங்களின் பிரம்மாஸ்திரமாக பார்க்கிறது. பல வருட திராவிட அரசியலை ரஜினியை வைத்து மொத்தமாக உடைக்கலாம். தமிழகத்தில் கால் பதிக்க ரஜினிதான் ஒரே வாய்ப்பு. இந்த சந்தர்ப்பத்தை விட கூடாது என்று பாஜக கடுமையாக நம்புகிறது. ஆனால் திமுக இதை வேறு விதமாக டீல் செய்கிறது.
ரஜினியை பாஜக தங்களின் பிரம்மாஸ்திரமாக பார்க்கிறது. பல வருட திராவிட அரசியலை ரஜினியை வைத்து மொத்தமாக உடைக்கலாம். தமிழகத்தில் கால் பாதிக்க ரஜினிதான் ஒரே வாய்ப்பு. இந்த சந்தர்ப்பத்தை விட கூடாது என்று பாஜக கடுமையாக நம்புகிறது. ஆனால் திமுக இதை வேறு விதமாக டீல் செய்கிறது.

பெரியார் குறித்து ரஜினி சொன்ன கருத்தை திமுக பெரிதாக கண்டுகொள்ளவில்லை. முதல் விஷயம் திமுக தலைவர் ஸ்டாலின், ரஜினி கருத்தை மிக நேர்த்தியாக எதிர்கொண்டார். மிகவும் சாதாரணமாக, நண்பர் ரஜினி பெரியார் பற்றி படிக்க வேண்டும் என்று, ஹோம்வொர்க் செய்யாத குழந்தைக்கு அறிவுரை சொல்வதை போல சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்.
அதேபோல் பொருளாளர் துரைமுருகனும் கூட ரஜினி குறித்து வாய் திறக்கவில்லை. இதுதான் ரஜினியை திமுக டீல் செய்யும் விதம். ரஜினியை பெரிதாக திமுக கண்டுகொள்ளவில்லை. நீங்கள் அரசியல்வாதி இல்லை, நடிகர் என்று ரஜினியை ஸ்டாலின் சொன்னதற்கு காரணமும் இதுதான். ஆம் ரஜினியை ஸ்டாலினோ, திமுகவோ பெரிதாக அரசியல்வாதியாக ஏற்கவில்லை.

இதனால்தான் ரஜினியை உதயநிதியை வைத்து திமுக டீல் செய்கிறது. ரஜினியின் எல்லா பேச்சுக்கும் உதயநிதி மிக கடுமையாக பதில் அளித்து வருகிறார். கடுமையாக பதில் அளித்தாலும் இடையே இடையே காமெடி தூக்கலாக, ரஜினியை உதயநிதி கிண்டல் செய்கிறார். உங்களுக்கு வயதாகிவிட்டது, நீங்கள் ஏற்கனேவே மன்னிப்பு கேட்டவர்தான், ரஜினி இப்படித்தான் எதையாவது உளறுவார் என்று வரிசையாக உதயநிதி கிண்டல் செய்து வருகிறார்.

இதனால்தான் ரஜினியை உதயநிதியை வைத்து திமுக டீல் செய்கிறது. ரஜினியின் எல்லா பேச்சுக்கும் உதயநிதி மிக கடுமையாக பதில் அளித்து வருகிறார். கடுமையாக பதில் அளித்தாலும் இடை இடையே காமெடி தூக்கலாக, ரஜினியை உதயநிதி கிண்டல் செய்கிறார். உங்களுக்கு வயதாகிவிட்டது, நீங்கள் ஏற்கனவே மன்னிப்பு கேட்டவர்தான், ரஜினி இப்படித்தான் எதையாவது உளறுவார் என்று வரிசையாக உதயநிதி கிண்டல் செய்து வருகிறார்.

2021 தேர்தலில் ரஜினி போட்டியிட்டால், உதயநிதி மிக முக்கிய எதிர்வினையாக இருப்பார். சமயத்தில் உதயநிதியை ரஜினிக்கு எதிராக நிற்க வைக்க கூட திமுக முயற்சிக்கும். 2021 தேர்தலில் அப்படி ஒரு விஷயம் மட்டும் நடந்தால் அது பெரிய திருப்பமாக அமையும்.

அரசியலுக்கு வரும் போதே தேமுதிக விஜயகாந்த் அதிரடியான நபராக பார்க்கப்பட்டார். ஆனால், போக போக அவரை வைத்து மீம் போட்டு, காமெடி செய்யும் நிலை உருவானது. ஆனால் ரஜினியோ அரசியலுக்கு வருவதற்கு முன்பே அவரை வைத்து திமுக காமெடி செய்து வருகிறது, உதயநிதி கலாய்க்க தொடங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.